நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் டூ படிக்கும் மாணவியான அவர் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக் கொண்டார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சோசியல் மீடியா சாட்டிங்கின் போது டீனேஜ் இளைஞர்கள் மனநிலை குறித்தும், அவர்களுக்கு சொன்ன அறிவுரையும் வைரலாகி வருகிறது. இந்த சாட்டிங்கின் போது ரசிகர் ஒருவர், டீனேஜ் இளைஞர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுவீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “பொதுவாகவே இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுதான் அவர்களிடையே உள்ள மிக மோசமான எண்ணம். ஆனால் இங்கிருந்து தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் எல்லாவித சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் இப்படி பயணிக்கும்போது நீங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிக பலமானவர்களாக கூட மாறுவீர்கள். இது எனக்கே நடந்துள்ளது. 25 வயதுக்கு முன் இருந்த நான் வேறு. இதேபோன்று பல பிரச்சனைகளை சந்தித்து எனது வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட சந்தோசமாக, பலமானவளாக, பாசிட்டிவான நபராக மாறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.