'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் பல ஹீரோக்கள் தங்களது படங்களில் நடிகை ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர். அதேசமயம் ஹிந்தியிலும் அவரது பார்வை திரும்பி உள்ளது. ஏற்கனவே அவர் நடித்த இரண்டு ஹிந்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெறாத நிலையில் அடுத்ததாக ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ராஷ்மிகா. இன்னொரு பக்கம் தெலுங்கில் நாகார்ஜுனா போன்ற சீனியர் ஹீரோக்களும் ராஷ்மிகாவுடன் இணைந்து நடிக்க விரும்புகின்றனர்.
அப்படி தற்போது தனது புதிய படத்திற்காக ராஷ்மிகாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய நாகார்ஜுனாவுக்கு நோ சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளாராம் ராஷ்மிகா. இதற்கு முன்னதாக கூட பங்காராஜு படத்திலும் இதே போன்ற ஒரு வாய்ப்பு வந்த போது அப்போதும் ராஷ்மிகா மறுத்து விட, அவருக்கு பதிலாக கிர்த்தி ஷெட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்குமே தன்னிடம் கால்சீட் இல்லை என்று அவர் காரணம் கூறியிருந்தாலும் தொடர்ந்து நாகார்ஜுனாவின் படங்களை ராஷ்மிகா தவிர்த்து வருவது டோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.