ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த மிஷ்கின், தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் லியோ படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லியோ படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் விஜய் பார்த்து விட்டார். படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லி தனது மகிழ்ச்சியை என்னிடத்தில் வெளிப்படுத்தினார். அதோடு கண்டிப்பாக தியேட்டர்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை இந்த படம் பெரும் என்றும் விஜய் என்னிடத்தில் சொன்னார் என்று கூறும் இயக்குனர் மிஷ்கின், இன்னும் சில தினங்களில் நானும் லியோ படத்தை பார்க்கப் போகிறேன். இந்த படத்தில் முக்கியமான வில்லனாக நடித்திருப்பதால் கண்டிப்பாக எனது வேடமும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று கூறிய மிஷ்கின், இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழா வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.