நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகன் கடந்த 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதைபோலவே மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சீரியல் நடிகையும் ரவீந்தரின் மனைவியுமான மகாலெட்சுமி, ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ-கிளாஸ் சிறை வழங்கவேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு மனுவில் ரவீந்தரை ஜாமினில் வெளிவிடக்கோரியும் கேட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.