தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் |
தமிழ் படம் 1,2 படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் முதல் முறையாக சீரியஸ் ஆன கதை களத்தில் இயக்கி வரும் திரைப்படம் 'ரத்தம்'. இதில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இன்பினிட்டி நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்து ஆண்டே முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். அன்றைய தினம் ஏற்கனவே 5 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த சந்திரமுகி 2 படமும் தள்ளி வைக்கப்பட்டு செப்., 28 படங்களின் ரேஸில் இணைந்தது. இதுபற்றி சமீபத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார் ரத்தம் பட தயாரிப்பாளரான தனஞ்செயன்.
இந்நிலையில் செப் 28ம் தேதி நிறைய படங்கள் வெளியாகுவதால் ரத்தம் படத்தை ஒரு வாரம் தள்ளி அக்டோபர் 6ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.