மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்தபட்சம் அவர் 6 மாதங்கள் வரை சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்தார். புதிய படங்களுக்கு வாங்கிய முன் பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
தற்போது இதே போன்று நடிகை பூஜா ஹெக்டேவும் உடல் நலனை கருத்தில் கொண்டு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ராதே ஷ்யாம் படத்தில் நடித்தபோது பூஜாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. கடும் வலியால் துடித்தார். தொடர் வலி காரணமாக அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிக்சை செய்யப்பட வேண்டும் என்றும் இதனால் குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியது வரும் என்றும் டாக்டர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் அவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக ஒப்பந்தமாகி இருந்த 'குண்டூர் காரம்' படத்தில் இருந்து விலகினார். அடுத்து பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' படத்திலும் நடிக்க இருந்தார். அதில் இருந்தும் விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா போன்று பூஜாவும் உண்மையை வெளிப்படையாக பேசினால்தான் என்ன நிலவரம் என்பது தெரிய வரும் என்கிறார்கள்.