தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
நடிகர், நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் ஏராளமான ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறவர். அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போதே 60 குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பது, இதய அறுவை சிகிச்சைப் பண்ணுவது எனப் பல உதவிகள் செய்து வந்தேன். அப்போது அவ்வளவு உதவிகள் செய்வதற்கு என்னிடம் பணமில்லை. அதனால் என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன். பலரும் எனக்கு உதவினார்கள்.
இப்போது ஹீரோ ஆகிவிட்டேன். இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் பண்ணிய நான், இப்போது ஒரே ஆண்டில் மூன்று படங்கள் பண்ணுகிறேன். நல்ல பணம் வருகிறது. 'உனக்கு நல்லாதான பணம் வருது, ஏன் மத்தவங்ககிட்ட வாங்கி உதவி பண்ணனும். நீயே பண்ணலாமே' என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வியெழுந்தது. அதனால், நானே அவர்களுக்கு உதவிகள் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
ஆணவத்தால் நான் இதைச் சொல்லவில்லை. உங்களைச் சுற்றி நிறைய கஷ்டப்படுகிற அறக்கட்டளையும், மக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் எவ்வளவு சொன்னாலும் என்னுடன் சேர்ந்து உதவிகள் செய்ய வேண்டுமென்று பலர் ஆசைப்படுகிறீர்கள். கஷ்டப்படுபவர்கள் யார் என்று உங்களுக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். நீங்களே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதில் உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் லைகா நிறுவனம் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.