அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛லக்கி மேன்'. செப்., 1ல் படம் வெளியாகிறது. செய்தியாளர்களிடம் பேசிய யோகிபாபு, ‛‛என் வாழ்க்கையில் நான் ‛அன் லக்கியாதான்' சுற்றிக் கொண்டு இருந்தேன். நல்ல இயக்குனர்களால் லக்கி மேன் ஆனேன். 23 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். பாலாஜி என்னிடம் வரும் போது அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பொதுவாக என்னிடம் வரும் ஒவ்வொரு இயக்குனர்களிடமும் கதை கேட்டு படம் பண்ணுவதில்லை. அவர்களின் கஷ்டங்களை கேட்டு தான் படம் பண்ணுகிறேன். எனக்கு சோறு போட்டது காமெடி தான். கடைசிக் காலம் வரை காமெடியனாகத்தான் இருப்பேன். பாலாஜி, மடோன் அஸ்வின் மாதிரியான இயக்குநர்கள் எனக்கு நல்ல படம் கொடுத்திருக்காங்க. நல்ல கதை வந்தால் நாயகனாக நடிப்பேன். எதற்காகவும் காமெடியன் என்பதை விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்றார்.