'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றார் பிரபாஸ். தெலுங்கு நடிகர்கள், ஏன், தென்னிந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
பிரபாஸின் ஒரே நம்பிக்கையாக 'சலார்' படம் மட்டுமே இருக்கிறது. 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் இப்படம் செப்டம்பர் மாதம் இன்னும் ஒரு மாத காலத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்து சில வெளிநாடுகளில் முன்பதிவு கூட ஆரம்பமாகிவிட்டது.
ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 3ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் சாதனைகளை இப்படத்தின் டிரைலர் நிச்சயம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
'பாகுபலி 2'க்குப் பிறகு வந்த படங்கள் பிரபாஸை ஏமாற்றிய நிலையில் 'சலார்' படமாவது காப்பாற்றுமா என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.