லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் 2023 கிரிக்கெட் உலகக்கோப்பையை பாரிசில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா. இதன் மூலம் உலகக்கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றார் நடிகை மீனா. இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மீனா "உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.
இப்போது சமூக வலைதளங்களில் உலகக்கோப்பை உடன் மீனா உள்ள போட்டோ வைரலாகி வருகிறது.