ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'ரங்கோலி'. இதில் மாநகரம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹமரேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வரும் படம் என்பதால் இந்த படத்தின் டிரைலரே இளைஞர்களை கவர்ந்தது கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரோமொஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ரங்கோலி படக்குழுவினர்கள் இந்த படத்தை ரிலீஸ்க்கு முன்பே சிறப்பு காட்சி திரையிட்டுள்ளனர். மாணவர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.




