ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரோனா தாக்கம் வந்த பிறகு ஒரு மொழியில் தயாராகும் மற்ற படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெறுவது அதிகமாகிவிட்டது. தெலுங்கில் தயாரான 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. 'பொன்னியின் செல்வன்' படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ரசிகர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அந்த வருத்தத்தைத் தற்போது 'ஜெயிலர்' படம் போக்கியுள்ளது.
தெலுங்கில் சுமார் 12 கோடிக்கு விற்பனையான 'ஜெயிலர்' படம் பங்குத் தொகையாக மட்டும் 42 கோடியைத் தந்து 30 கோடி ரூபாய் லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் லாபத்தைத் தரும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு கன்னடப் படமான 'காந்தாரா' படம் 27 கோடி ரூபாய் லாபத்தைத் தந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது 'ஜெயிலர்' முறியடித்துள்ளது.




