ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக துல்கர் சல்மான் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.
அதேசமயம் விக்ரமின் மகன் துருவ்வும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும் தற்போது வரை அது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயமாக இந்த படம் வெளியான பிறகு துருவ் விக்ரமின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்வும் சொல்லப்படுகிறது.
கடந்த 1993-ல் மலையாளத்தில் துருவம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் ஜோஷி இயக்கியிருந்த இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாகவும் சுரேஷ்கோபி மற்றும் விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தனர். அதை நினைவூட்டும் விதமாக அந்த படத்தில் பங்கு பெற்ற சீனியர்களின் வாரிசுகளான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் விக்ரமின் மகன் துருவ் என நால்வரும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.