நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
நிசப்தம் படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராகவும், நவீன் பொலிஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் நடித்துள்ளார்கள். அடுத்த மாதம் 7-ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திருமணம், குடும்ப உறவு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத அனுஷ்காவுக்கு அம்மாவாக வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. அதனால் திருமணம் தேவையில்லை. கர்ப்பமானால் மட்டும் போதும் என்று முடிவெடுத்து ஒரு ஆண் மகனை தேடுகிறார். அப்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருக்கும் ஹீரோவுடன் பழகும் அனுஷ்கா, தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதையோட்டமாக அமைந்திருக்கிறது. இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.