மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சுகன்யா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியின்போது, மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இப்போது 50 வயதாகிறது. இனிமேல் நான் கல்யாணம், குழந்தை என்று இறங்கினால், பிறக்கப் போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? இல்லை பாட்டி என்று அழைக்குமா என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை'' என்று அந்த கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கொடுத்துள்ளார் சுகன்யா.