ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவி நடிகையான ரித்திகா தமிழ்செல்வி குக் வித் கோமாளி மற்றும் பாக்கியலெட்சுமி சீரியல்களில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணமானதை தொடர்ந்து சின்னத்திரை கமிட்மெண்டுகளில் இருந்து விலகி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பாக்கியலெட்சுமி சீரியலை விட்டும் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ரித்திகாவின் ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் முக்கிய கதாபாத்திரமான அம்ரிதா கதாபாத்திரத்தில் ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அக்ஷிதா நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவருகிறது. அதற்கேற்றார் போல் பாக்கியலெட்சுமி குழுவினர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களில் ரித்திகாவுக்கு பதிலாக அக்ஷிதா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.