ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் |
ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பதற்காக கபடி விளையாட்டு பயிற்சிகளை பெற்று வந்தார் துருவ் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ், அப்பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வடிவேலு, உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படம் திரைக்கு வந்துவிட்டதால், மீண்டும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.
மேலும், இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் நான்காவது படத்தை டாடா என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். ‛உண்மையில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம். எனினும் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என பதிலளித்தார்.