ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராமில், 'டப்பிங் தான் முக்கியம். உங்கள் நடிப்பு உங்களுடைய குரலில்லாமல் முழுமை அடையாது' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒருவர் 'தயவுசெய்து இந்த சீரியலை முடிச்சிடுங்க. முடியல' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.
இதற்கு ஸ்ரீகுமார், 'ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்' என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.