Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம்!

19 ஆக, 2023 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Chiyaan-Vikram-to-collaborate-with-Lokesh-Kanagaraj

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக 20 கிலோ வரை வெயிட் குறைத்து அவர் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்ததும் அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கப் போகிறார். அந்த படத்திற்காக தற்போது புது லுக்கிற்கு மாறி உள்ளார் விக்ரம். மொட்டை தலையுடன் பிரெஞ்சு தாடியுடன் ஒரு மாஸான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார் விக்ரம்.

நேற்று இயக்குனர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் இதே லுக்கில் தான் விக்ரம் கலந்து கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த துருவ நட்சத்திரம் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய்?ஜவான் படத்தின் புரமோஷன் ... அப்பா பட ரீமேக்கில் நடிப்பீர்களா? துல்கர் சல்மான் நெத்தியடி பதில் அப்பா பட ரீமேக்கில் நடிப்பீர்களா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)