அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தற்போது 50 சதவிகிதத்திற்கும் மேல் ஹாரர் கலந்த த்ரில்லர் படங்கள் தயாராகின்றன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு ஹாரர் படத்தை எடுத்து விட முடியும் என்கிற நிலையே இதற்கு காரணம். இதனை கருத்தில் கொண்டு ஹாரர் படங்களை மட்டும் தயாரிப்பதற்காக 'நைட்ஷிப்ட் ஸ்டூடியோ' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் மற்றும் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இணைந்து இதனை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறும்போது, "உள்நாட்டு ஹாரர் - த்ரில்லர் படங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் எப்போதுமே புது வகையான முயற்சிகளுக்கு வழி கொடுத்து வருகிறது, அதே சித்தாந்தத்தை கைப்பற்றி நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முயற்சிகளும் அமையும்." என்றார்.