'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
‛ஸ்வீட் காரம் காபி' என்ற வெப்சீரிஸில் நடித்த நடிகை சாந்தி பாலச்சந்திரன், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்த தொடரில் அவரது நடிப்பு, பலரது பாராட்டையும் பெற்றது. அதேபோல், இதற்கு முன்னதாக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்படமான ‛ஜல்லிக்கட்'டில் சோபியாக நடித்தும் ஆச்சரியப்பட வைத்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல், ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இசை வீடியோவான ‛ஒப்லிவியன்' (Oblivion) மூலம் எழுத்தாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒரு திரைப்படத்தில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்துள்ள சாந்தி பாலச்சந்திரன், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பு தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.