30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த வாரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'போலா சங்கர்', ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் 'ஓஎம்ஜி 2', சன்னி தியோல் நடிக்கும் 'கடார் 2' ஆகிய படங்களும் வெளிவர உள்ளன. கடந்த சில தினங்களாக இப்படங்களுக்கான முன்பதிவு ஆன்லைன் தளங்கள் மூலம் நடந்து வருகிறது.
அதில் மற்ற படங்களைக் காட்டிலும் ரஜினியின் 'ஜெயிலர்' படம் பல மடங்கு வித்தியாசத்தில் முந்திச் சென்று கொண்டிருக்கிறது. முன்பதிவின் மூலம் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமாக இப்போதே வசூலித்துவிட்டதாம். அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு மூலமாக 6 லட்சம் டாலர் வசூலாகியுள்ளதாம். இது நாளைக்குள் அதிகமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ரஜினிகாந்த்துடன் வரும் சிரஞ்சீவி, அக்ஷய்குமார், சன்னி தியோல் ஆகியோரது படங்களுக்கு எதிர்பார்த்த அளவில் ஆன்லைன் தளங்களில் கூட முன்பதிவு நடைபெறவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளம் இயக்குனரான நெல்சனுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்பதே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.