மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் கேப்டன் மில்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 23.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் மொழி டீசர் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் டீசர் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது 3 கோடி பார்வையாளர்களை யூடியூப்பில் கடந்துள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.