சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த மே மாதம் வெளியாகி மிகப் பரபரப்பை ஏற்படுத்திய படம் தி கேரள ஸ்டோரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. ஹிந்தியில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தமிழில், ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விளம்பரம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கி விட்டது. தொடர்ந்து படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வரும் அடா சர்மா நடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்து விட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாகவே என் கை கால்களில் அலர்ஜி காரணமாக தோலில் தடிப்பு ஏற்பட்டது. இதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் குணமாகவில்லை. இதனால் தற்போது ஆயுர்வேத சிகிச்சைக்கு தயாராகி வருகிறேன். அதனால் படப்பிடிப்புகளில் இருந்து சில நாட்கள் விடுமுறை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அடா சர்மா, யாரும் இதைப் பார்த்து பயந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.