அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் துல்கர் சல்மான் தற்போது தனது கிங் ஆப் கோதா என்கிற படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓணம் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் முதன்முறையாக பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த ஆல்பம் வெளியாகி விட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆல்பத்தை புரமோட் செய்து வருகிறார் துல்கர் சல்மான்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆல்பத்தை உங்களுக்கு உதவியாக புரமோஷன் செய்ய வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்..? நித்யா மேனனையா அல்லது மிருணாள் தாக்கூரையா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மிருணாள் தாக்கூர் என்று பதில் அளித்தார் துல்கர் சல்மான். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
காரணம் கடந்த பத்து வருடங்களாக துல்கர் சல்மானுடன் இணைந்து மூன்று படங்களில் கதாநாயகி நடித்துள்ளார் நித்யா மேனன். ஆனால் மிருணாள் தாக்கூர் கடந்த வருடம் வெளியாக சீதாராமம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் துல்கருடன் இணைந்து நடித்துள்ளார். அதனால் நித்யா மேனன் பெயரைத்தான் அவர் சொல்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த துல்கர் சல்மான், “சீதாராமம் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த படம் நான் கனவு கண்டதை விட மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அது ஒரு ஐகானிக் படம்” என்று கூறி சென்டிமென்ட் ஆக மிருணாள் தாக்கூர் பெயரை தான் கூறியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் துல்கர் சல்மான்.