பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
பாலிவுட்டின் முன்னணி கலை இயக்குனர் நிதின் சந்திரகாந்த். பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார். தேவதாஸ், ஜோதா அக்பர், உள்ளிட்ட பல சரித்திர படங்களுக்கு அரண்மனை செட் அமைத்து புகழ்பெற்றவர். சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய திரைப்பட விருதை 4 முறை பெற்றுள்ளார்.
57 வயதான நிதின் சந்திரகாந்த் மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்திருக்கும் தனது என்.டி ஸ்டுடியோவில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் பற்றி கூறப்படுவதாவது: ஆர்ட் டைரக்டராக பணியாற்றி நல்ல வசதியோடு வாழ்ந்த நிதின் சந்திரகாந்த் 2005ம் ஆண்டு கர்ஜத்தில் தனது என்.டி ஸ்டுடியோவை கட்டினார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு என்.டி ஸ்டுடியோவில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு, செட்டுகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த ஸ்டூடியோவுக்காக அவர் இன்சூரன்ஸ் எதுவும் செய்து வைத்திருக்கவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார். பல தனியார் நிறுவனங்களில் பல்வேறு கட்டங்களாக 252 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடன்களை திருப்பிக் கேட்டு நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நிதின் சந்திரகாந்த் அந்த ஸ்டூடியோவிலேயே தற்கொலை செய்ததாக பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.