ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது என்று சொல்வார்கள். ஒரு படம் ஓடினால் மட்டுமே அவர்களுக்கு லாபம். படம் ஓடவில்லை என்றால் செய்த முதலீடுகள் அனைத்தும் நஷ்டமே. ஒரு காலத்தில் ஆகா, ஓகோவென இருந்த தயாரிப்பாளர்கள் பின்னர் பணக் கஷ்டத்தால் தவித்த சம்பவங்களுக்கு நிறையவே உதாரணங்கள் உண்டு. அப்படி ஒரு நிலை ஒரு முக்கிய தயாரிப்பாளருக்கு சமீபத்தில் வந்தது.
நடிகர் சத்யராஜுக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி தந்த 'என்னம்மா கண்ணு' படத்தையும், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பெரிய திருப்பத்தைத் தந்த 'பிதாமகன்' படத்தையும் தயாரித்தவர் வி.ஏ.துரை. இவர் இயக்குனர் எஸ்பி முத்துராமனிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராகவும், ரஜினியின் 'பாபா' படத்திற்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் இருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நடிகர்கள் அவருக்கு உடனடியாக உதவிகளைச் செய்து அவர் குணமடையக் காரணமாக இருந்தனர். இந்நிலையில் சர்க்கரை பாதிப்பால் அவரது ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதை எடுத்தும் விட்டார்களாம். அதற்கு பதிலாக செயற்கைக் கால் பொருத்த போதுமான பணம் இல்லாமல் அவஸ்தைப்பட்டுள்ளார்கள். அதைப் பற்றிக் கேள்விட்ட 'பிதாமகன்' நடிகர் விக்ரம் அந்த செயற்கைக் காலுக்குரிய பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'பிதாமகன்' படம் வெளியான பின்பு விக்ரமிற்கு சுமார் 25 லட்ச ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் விஏ துரை வைத்தது அப்போது செய்தியாக வெளிவந்தது. அதற்கான பேச்சு வார்த்தை, பஞ்சயாத்தும் நடந்து நீண்டு கொண்டே போனது. 20 வருடங்களாக இருந்த அந்த பகையை மறந்து தயாரிப்பாளர் துரைக்கு விக்ரம் உதவி செய்துள்ளார். அவரது உதவியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் துரை, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.