காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்தவர் மோகன்(60). சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றி வந்தார். கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கமலின் நண்பர்களில் ஒருவராக குள்ள மனிதராகவே நடித்தார். அதன் பின்னர் 'நான் கடவுள்', 'அதிசய மனிதர்கள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு நின்று போனதும் சென்னையில் இருந்து கிளம்பி பல ஊர்களுக்கு சென்று, கிடைக்கும் வேலையை பார்த்துக் கொண்டு காலத்தை கடத்தி வந்தார். கடைசியாக மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தங்கி பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 60 வயதான மோகன் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிக்சை எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் வந்து உடலை மீட்டு விசாரணையில் இறங்கியபோதுதான் அது மோகன் என்றும், சினிமா துணை நடிகர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் மோகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.