பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகை தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் புரொமோஷனுகாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் தமன்னா.
அதில் "நான் நடித்ததில் சுமாரான படமென்றால் நிறைய படம் இருக்கு. சுறா படம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் அந்த படம் தான் நான் நடித்ததில் மோசமான படம் என நினைக்கிறேன். அந்த படத்தில் நிறைய இடங்களில் நான் கேவலமா இருந்தேன். இனிமேல் அது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன். சுறா படம் நல்லா போகாது என படப்பிடிப்பின் போதே எனக்கு தோனுச்சு. நிறைய படங்கள் நாம் நடிக்கும் போதே தோணும். அது சரியா போகாது. வெற்றி, தோல்வியை தாண்டி நம்ம அந்த படத்தில் ஒப்பந்தமாகிருக்கோம் என்பதற்காக மட்டும் அதில் பல சூழ்நிலைகளில் நடிக்க வேண்டி உள்ளது. சினிமாவில் கோடி கணக்கில் பணம் போடுகின்றனர். அதை உணர்ந்து அந்த படத்தை முடித்து கொடுக்க வேண்டியது நம் கடமை " என இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.