லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
80களில் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி, பின்னர் பாலிவுட்டிலும் முன்னணி நடிகை ஆனார். இவரது சித்தி மகள் மகேஸ்வரியும் நடிக்க வந்தார். 'கருத்தம்மா' படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு பாஞ்சாலங்குறிச்சி, நேசம், என் உயிர் நீதானே, நாம் இருவர் நமக்கு இருவர், மன்னவரு சின்னவரு உள்பட பல படங்களில் நடித்தார் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தார். சினத்திரை தொடர்களிலும் நடித்தார்.
தற்போது இவரது தம்பி உதய் கார்த்திக் நடிக்கும் படம் 'டைனோசர்'. சாய் பிரியா நாயகியாக நடிக்கிறார். ஜோன்ஸ் வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார் போபோ சசி இசை அமைக்கிறார். கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரி க்கிறார். எம்.ஆர்.மாதவன் இயக்குகிறார். வருகிற 28ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாதவன் கூறும்போது “டைனோசர் என்பதை டை நோ சார்'' என்று பிரித்து பொருள் கொண்டால் 'சாக வேண்டாம் சார்' என்று பொருள். அதுதான் இந்த படத்தின் கதை. அதாவது வன்முறை வேண்டாம் என்று சொல்கிற படம். வட சென்னை தாதாக்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடும் ஹீரோ, எப்படி அதில் ஜெயிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.