4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

திட்டம் இரண்டு் பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‛அடியே'. ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன், ஆர்.ஜே.விஜய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பொருட்செலவில் மாலி மற்றும் மான்வி நிறுவனம் தயாரித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.




