‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் , அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. சமீபத்தில் தான் படப்பிடிப்பிடிப்பு முடிந்தது.
ஏற்கனவே இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இவர், போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தை இயக்கி நடித்திருந்தார். கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ராமகிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.