இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
மலையாளத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் ரிங் மாஸ்டர். இதனை ரபி இயக்கி இருந்தார். திலீப், கீர்த்தி சுரேஷ், ஹனிரோஸ் நடித்திருந்தார்கள். நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம். இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் திலீப் நடித்த நாய் பயிற்சியாளர் கேரக்டரில் ஆர்.கே. நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த பார்வையற்ற பெண் கேரக்டரில் பஞ்சாபி நடிகை மால்வி மல்ஹோத்ரா நடிக்கிறார். ஹனிரோஸ் நடித்த கேரக்டரில் அபிராமி நடிக்கிறார். ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
இதுகுறித்து மலையாளத்தில் அறிமுகமாகும் மால்வி மல்ஹோத்ரா கூறியதாவது: 'ரிங் மாஸ்டர்' தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையற்றப் பெண்ணாக நடிப்பதற்காக, இதற்கு முன் பார்வையற்றவர்களாகப் பலர் நடித்த படங்களைப் பார்த்தேன். நாள் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு வீட்டைச் சுற்றி நடந்து பயிற்சி செய்தேன். அதன் மூலம் பார்வையற்றவராக இருப்பது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். கண்களை மூடிக் கொண்டு பல் துலக்கினேன். இதுபோன்ற பயிற்சிகள், நடிக்கும்போது அதிக நம்பிக்கையைத் தருகிறது. இவ்வாறு மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நடித்த முதல் தமிழ் படம் 'எல்லாம் அவன் செயல்'. இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த 'சிந்தமாணி கொல கேஸ்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கிறார்.