ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
இந்திய அளவில் நம்பர் 1 நடிகர் யார் என்ற கேள்வி கடந்த சில வருடங்களில் அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் ஹிந்தி நடிகர்களைத்தான் அந்த டாப் 10 பட்டியலில் வைப்பார்கள். ஆனால், 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' என தென்னிந்திய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அப்பட்டியலில் தென்னிந்திய நடிகர்களும் இடம் பெற ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் யு டியூப் தளத்தில் வெளியாகும் டீசர், டிரைலர் மற்ற வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது அவற்றில் தற்போது முதலிடத்தில் இருப்பவர் பிரபாஸ் தான். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்' ஆகியவை வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவற்றின் யு டியுப் வீடியோக்கள், குறிப்பாக டீசர், டிரைலர்கள் ஆகியவை பல மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.
'பாகுபலி 2' ஹிந்தி டிரைலர் 126 மில்லியன் வியூஸ், 'சாஹோ' ஹிந்தி டிரைலர் 104 மில்லியன் வியூஸ், 'ராதே ஷ்யாம்' டிரைலர் 61 மில்லியன் வியூஸ், 'ஆதி புருஷ்' டிரைலர் 86 மில்லியன் வியூஸ், அடுத்து வெளியாக உள்ள 'சலார்' டீசர் 120 மில்லியன் வியூஸ் என மற்ற ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிக வியூஸ்களைப் பெற்றுள்ளன.
பாலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நடித்து அதிகம் எதிர்பார்க்கப்படும் 'ஜவான்' டிரைலர் இதுவரையில் 66 மில்லியன் வியூஸ்களையே கடந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள பிரபாஸின் 'கல்கி 2898 எடி' வீடியோ முன்னோட்டம் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதுவும் அதிக வியூஸ்களை அடுத்து வரும் நாட்களில் பெறலாம்.
இந்திய அளவில் அதிக வியூஸ்களைப் பெற்ற டீசர்களில் யஷ் நடித்த 'கேஜிஎப் 2' டீசர் 272 மில்லியன் வியூஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனை இன்னும் எந்த ஒரு ஹிந்தி ஹீரோக்களாலும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.