மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 எடி'. இதுநாள் வரையில் 'புராஜக்ட் கே' என்ற தற்காலிகப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு அமெரிக்காவில் நடந்த காமிக் கான் விழாவில் படத்தின் தலைப்பையும், வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
'கல்கி' என்பது விஷ்ணு பகவானின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரப் பெயர். கலியுகத்தில் தோன்றி தீயவை அனைத்தையும் கல்கி அவதாரம் அழிக்கும் என்று சொல்வார்கள். இந்து புராணங்களின்படி வருடங்களை யுகங்களாகப் பிரித்துள்ளார்கள். அதன்படி 'கிருதயுகம்' 17 லட்சத்து 18 ஆயிரம் வருடங்கள், 'திரேதாயுகம்' 12 லட்சத்து 90 ஆயிரம் வருடங்கள், 'துவாபரயுகம்' 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள், 'கலியுகம்' 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். தற்போது நடந்து வருவது 'கலியுகம்' என்று சொல்கிறார்கள். கலியுகம் முடிவடையும் போதுதான் கல்கி அவதாரம் நிகழும், வெள்ளை குதிரையில் வந்து போர் புரிந்து தீய சக்திகளை அவர் அழிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.
'கல்கி 2898 எடி' எனத் தலைப்பு வைத்து 'கல்கி' அவதாரத்தைப் பற்றிய படமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வீடியோ முன்னோட்டத்தைப் பார்த்ததும் தோன்றுகிறது. “இந்த உலகத்தை இருள் சூழ்ந்த போது, ஒரு சக்தி எழும், இப்போது முடிவு ஆரம்பமாகிறது,” என்ற வாசகங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், பசுபதி உள்ளிட்டோரது காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 'சக்தி' ஆக பிரபாஸ், 'இருள்' ஆக கமல்ஹாசன் என யூகிக்க முடிகிறது. வீடியோவின் முடிவில் 2898ம் வருடம் வந்து பின் 2024ம் வருடமாக மாறுகிறது. அது பட வெளியீட்டையும் குறிக்கலாம். விஎப்எக்ஸ் காட்சிகள், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரட்டலாய் உள்ளது.
இப்படத்தின் பிரபாஸ் போஸ்டர் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இந்த வீடியோ அதை மாற்றிவிட்டது. இந்திய சினிமாவின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இப்படம் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களை அடுத்து தெலுங்குத் திரையுலகத்தின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.