அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு, மற்ற அப்டேட்டுகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள 'காமிக் கான்' நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. இதற்காக கமல், பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள வீதிகளில் கமல், பிரபாஸ் ஆகியோர் நடந்து செல்லும் போட்டோக்களை படக்குழுவினர் பகிர்ந்து இருந்தனர்.
சயின்ஸ் பிக்ஷன் கலந்த கதையில் இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் தீபிகா போஸ்டரை வெளியிட்டவர்கள் இப்போது பிரபாஸின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அதில் ஹாலிவுட்டின் ‛அயர்ன்மேன்' மாதிரியான கேரக்டரில் பிரபாஸ் உள்ளார். அதன் உடன் ‛‛ஹீரோ எழுகிறார். இப்போதிலிருந்து ஆட்டம் மாறுகிறது'' என குறிப்பிட்டுள்ளனர்.