எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலேசியாவில் ஆல்பங்களில் நடித்து வந்த முகேன், பிக்பாஸ் 3வது சீசன் மூலம் புகழ்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 'வேலன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவர் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்தார். கவின் ராஜ் இயக்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் வெளியானது. அதன் பிறகு வெற்றி, மதில் மேல் காதல், காதல் என்பது சாபமா, ஜின் என பல படங்களில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேலன் படத்தை இயக்கிய கவின்ராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் முகேன். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜி.மணிகண்டன் தயாரிக்கிறர். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் படப்படிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.