ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் திலீப் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலீப், மஞ்சு வாரியர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து திலீப் தன்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் திலீப்பின் மகள் மீனாட்சி தனது தாய் மஞ்சு வாரியருடன் செல்லாமல் திலீப் - காவ்யா மாதவன் இருவருடன் தான் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தற்போது தனது குழந்தை சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிப்பதாக கூறியுள்ளார் திலீப். மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் ஆகியோரின் மகன்கள் எல்லாம் சென்னையில் தான் தங்களது கல்லூரி படிப்பை முடித்தனர். ஆனால் நடிகர் திலீப் தனது மகளை எல்கேஜியிலிருந்தே சென்னையில் படிக்க வைப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.