தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடி உள்ள காவாலா என்ற பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தமன்னாவின் சிறப்பான நடனத்திற்கு பல திரை பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், ரசிகர்களும் அவரை உற்சாகப்படுத்தும் கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிரா, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வக்கா வக்கா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது அந்தப் பாடலுடன் தமன்னாவின் காவாலா நடனத்தை இணைத்து ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அசந்து போன தமன்னா, இந்த இணைப்பு மிகச் சரியாக உள்ளது என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பவர், அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்துவிட்டு, இது உண்மைதான். தமன்னாதான் இந்தியாவின் ஷகிரா என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.




