ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி உள்பட 11 மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆசிஷ் வித்யார்த்தி. வில்லனாக மட்டுமின்றி குணசித்ர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழில் தில், பகவதி, பாபா, ஏழுமலை, கில்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே ராஜோஜி பருவா என்பவரை திருமணம் செய்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது 60 வயதாகும் ஆசிஷ் வித்யார்த்தி கடந்த மே மாதத்தில் தொழிலதிபர் ரூபாலி என்ற 33 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது குறித்த செய்திகள் வெளியானபோது பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆன போதிலும் இந்த விமர்சனங்களுக்கு எந்தவித பதிலும் அளிக்காத ஆசிஷ் வித்யார்த்தி, திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று விட்டார். அதையடுத்து தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்க்கு தனது புது மனைவியுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.