அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். 30க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், சின்னத்திரை தொடர்களில் நடித்தார். வெப் சீரிஸ்களிலும் நடித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு முப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சனா கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து, இனி மத பிரச்சாரம் செய்ய போவதாக கூறினார். பிரச்சாரம் செய்தும் வந்தார். கடந்த ஆண்டு தனது கணவருடன் மெக்கா புனித பயணம் சென்று வந்தார். இந்த நிலையில் சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் சனாகானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




