பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
1992ம் ஆண்டு ரஜினி நடித்த 'மன்னன்' படம் வெளிவந்தது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் விஜயசாந்தி, குஷ்பு நடித்திருந்தனர். தற்போது 21 வருடங்களுக்கு பிறகு 'மாமன்னன்' படம் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ளனர். ரஜினி நடித்த மன்னன் படம் தொழிலாளர், முதலாளி மோதலை சொன்னது. மாமன்னன் படம் ஆதிக்க ஜாதி, அடிமைப்படுத்தபட்ட ஜாதி மோதலை சொன்னது.
இந்த படம் ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டினார். பின்னர் தனது டுவிட்டரில் “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என்று எழுதியிருக்கிறார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், ‛‛என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.