ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் கலக்கியவர் 'மச்சான்ஸ்' நடிகை நமீதா. ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகரிக்கவே, பட வாய்ப்புகள் குறைந்தது. அதையடுத்து வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ண ஆதித்யன் மற்றும் கியான் ராஜ் என்கிற இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது ஒரு வயது நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கேரளாவில் உள்ள அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை செய்துள்ளார் நமீதா. இதுகுறித்து அவர் கூறும் போது, “இந்த குழந்தைகள் இருவரும் பிறந்த பின்னர் தான் எங்களது வாழ்க்கையில் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஹேப்பி பர்த்டே டு மை ட்வின்ஸ்.. இதயத்தில் இருந்தும்.. இதயத்துடிப்பில் இருந்தும்..” என்று கூறியுள்ளார்.