அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் |
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடை முறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்…
* மல்டிபிளக்ஸ் -- ஏசி தியேட்டர் ரூ.250, நான் ஏசி ரூ.150
* மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200, நான் ஏசி ரூ.120
* ஐமாக்ஸ் - ரூ.450
* எபிக் - ரூ. 400
* சாய்வு இருக்கை தியேட்டர்கள் - ரூ.350