நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன், எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இவர்கள் அல்லாமல் ஹிந்தி நடிகையும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நாளை(ஜூலை 5) நடைபெற்று, படத்தின் தலைப்பை அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு ஜூலை மாத இறுதி வாரத்தில் துவங்கும் என்கிறார்கள்.