பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
அரபி புரொடக்சன்ஸ் சார்பில் ரஜீப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் 'பைண்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரில்லர் படமான இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், நடிகை பிரானா ஆகியோரும் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.