எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ராயல் பார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தின் கதை சற்று வித்தியாசமானது. ஆதியும், யோகி பாபுவும் நெருக்கமான நண்பர்கள், ஆதி பலக் லால்வானியை காதலித்து வருகிறார். இந்த நிலையில் ஆராய்ச்சியாளரான பாண்டியராஜனை ஒரு வேலையாக ஆதியும், யோகி பாபுவும் சந்திக்கிறார்கள். அவரது லேபில் நடக்கும் ஒரு கோளாறால் திடீரென யோகிபாபு பெண்ணாக மாறிவிடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இந்த கதையில் யோகிபாபு மாறிய பெண்ணாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது: இப்படி ஒரு கேரக்டரில் இதற்கு முன் யாராவது நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிறைய ஹீரோக்கள் பெண்ணாக நடித்திருக்கிறார்கள் ஹீரோயினரானால் ஆணாக நடித்திருக்கிறேன் ஆணாக வேஷம் போடவில்லை என்றாலும், ஆண்களின் மேனரிஷம் டயலாக் டெலிவரி ஆகியவற்றை முயற்சி செய்திருக்கிறேன்.
யோகி பாபுவின் நடை உடை பாவனைகளை கண்காணித்து அதேபோலவே நடிக்க முயற்சித்து இருக்கிறேன் இந்த படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம். இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணாகப் பிறந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் பெண்ணாக பிறந்ததிலேயே பெருமை கொள்கிறேன். அடுத்த ஜென்மத்தில் கடவுள் ஆணாக படைத்தால் மகிழ்ச்சி.
திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை நடிப்பில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற வித்தியாசம் இல்லை. எனது கணவர் முழு சுதந்திரம் தந்திருக்கிறார். அதனால் தொடர்ந்து நடிக்கிறேன். இனி என்னை அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம். என்றார்.