துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மாவீரன் படத்தில் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒளிந்து உள்ளதாக பரவி வந்தது. தற்போது அந்த சர்ப்ரைஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காதில் மட்டும் ஒரு குரல் அடிக்கடி ஒலிக்குமாம். அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியை முதலில் அணுகியுள்ளனர். அதன்பின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அந்த குரல் கொடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறுதியாக யார் அந்த குரல் கொடுத்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இன்று வெளியாகும் மாவீரன் டிரைலரில் அந்த மர்ம குரல் யார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.