இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி படம் ப்ராஜெக்ட் கே. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இந்த படத்தில் கல்கி உருவாக்கிய கடவுள் விஷ்ணுவின் கடைசி அவதாரம் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்கிறார்கள். மேலும், இது சயின்ஸ் பிக்சன் கதை களத்தில் உருவாக உள்ளதாம். நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் கதையில் இறுதியில் தீய சக்தியை வென்று உலகத்தை காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.