கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை கடந்ததாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மேடையில் கூறியதாவது: "கடந்த வருடம் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. நல்ல படம் என்று அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அந்த சமயத்தில் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் தான் நடிக்கிறோமா? என கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலாக போர் தொழில் படம் அமைந்தது. உன் வேலையை நீ சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்" இவ்வாறு தெரிவித்தார்.